யாழ்.பலாலியில் 1009.87 ஏக்கர் நிலம் சுவீகரித்த நிலையில், மேலும் 114 ஹெக்ரயர் விவசாய நிலத்தை சுவீகரிக்க திட்டம் -- பலாலி மீள்குடியேற்ற சபை குற்றச்சாட்டு

யாழ்.பலாலியில் 1009.87 ஏக்கர் நிலம் ஏற்கனவே சுவீகரிப்பு--643 குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு இல்லை --மாற்றுக் காணிகள் வழங்கவும் நடவடிக்கை இல்லை-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் விமானப் படையினருக்காக இரு தடைவைகளில் சுமார் 1009.87 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலைய விஸ்தரிப்பு என்ற போர்வையில் மேலும் 114 ஹெக்ரயர் விவசாய நிலத்தை சுவீகரிக்க திட்டம் தீட்டப்படுவதாக பலாலி மீள்குடியேற்ற சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து மேலும் அவர்கள் கூறியுள்ளதாவது,
1960 களின் பிற்பகுதியில் பலாலி விமான நிலையத்திற்காக காணி சுவீகரிப்பு செய்யப்பட்டது.
பின்னர் 1980களில் 2ம் கட்டமாக காணிகள் சுவீகரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு இரு கட்டங்களாக 1009.87 ஏக்கர் நிலம் விமான நிலையம் மற்றும் விமானப்படைக்காக சுவீகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளில் சுமார் 660.05 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானதாகும்.
மிகுதி 349.82 ஏக்கர் அரச காணியாகும்.
இதில் தனியாருக்கு சொந்தமான 660.05 ஏக்கர் காணி 643 குடும்பங்களுக்கு சொந்தமானது.
அவர்களுக்கு இதுவரையில் எந்தவிதமான இழப்பீடுகளும் வழங்கப்பட வில்லை.
45 குடும்பங்கள் இழப்பீடு பெற விரும்பவில்லை.
இழப்பீடு பெற விரும்பியவர்களுக்கு இழப்பீடும் இல்லை, மாற்றுக் காணிகளும் வழங்கப்படாத நிலையே காணப்படுகிறது.
இவ்வாறிருக்க விமான நிலையத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களை இலக்காக கொண்டு 114 ஹெக்ரயர் நிலத்தை சுவீகரிக்க திட்டம் தீட்டப்படுகிறது.
விமான நிலையத்திற்கு போதியளவு காணி உள்ளது.
ஆனாலும் 3ம் கட்டமாக காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பது விமான ஓடுபாதை விஸ்தரிப்பிற்காக அல்லது படையினர் விவசாயம் செய்வதற்கா? எனவும் கேள்வி எழுப் பியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
