யாழ்.நல்லூரில் திலீபன் ஆவணக் காட்சியகம் இன்று திறக்கப்படவுள்ளது.
தியாக தீபம் திலீபன் தொடர்பான “பார்த்தீபன் திலீபனாக - திலீபன் தியாக தீபமாக” எனும் கருப் பொருள் கொண்ட ஆவணக் காட்சியகம் இன்று வெள் ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள், முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இந்த ஆவண காட்சியகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் வரலாறு மற்றும் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.