கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஐயன் கோயிலடி, ஊரியான். பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளப் பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தமையால் முதலைகளும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வட்டக்கச்சி, பெரியகுளம் பகுதியில் இருந்து புளியம்பொக்கனை செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் பாய்வதன் காரணமாக கனரக வாகனங்கள் மாத்திரமே இவ்வீதி ஊடாக பயணிக்க கூடியதாக உள்ளதுடன் பாட சாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தனர்.
மழையுடன் கூடிய வானிலை குறைவடைந்தாலும், நீர்த் தேக்கங்களில் இருந்து வெளியேறும் நீர் மக்கள் குடியிருப்புக்களை ஊடறுத்து செல்வதால் மக்கள் மூன்றாவது முறையாகவும் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
