
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் வந்த நிலையில், இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல் 20 ஆயிரம் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் வந்த நிலையில், இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல் 20 ஆயிரம் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியான தரவுகளின்படி, இவர்கள் பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போன மாணவர்களின் பின்னணி பற்றி வெளியாகும் தகவல்களில் பல மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி பயில சேர்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள், கனடா வந்து பார்த்த பிறகுதான் அது போலியானவை என்றும் அவ்வாறு கல்லூரி அல்லது பல்கலையே இல்லை என்றும் தெரிய வந்திருக்கலாம்.
இதுபோன்ற மாணவர்கள் ஏதேனும் ஒரு சிறிய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கலாம் அல்லது கிடைத்த வேலையில் சேர்ந்து எப்படியோ கனடாவில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது பற்றி வெளியான தகவல்களில்,
மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் பெயரில், போலியான முகவர்கள் மூலம் இந்திய மாணவர்கள் சேர்க்கைக்கான கடிதம் பெற்று கனடா வந்து விடுகிறார்கள்.
பல லட்சம் கட்டி கனடா வந்து பார்த்தால், மோசடி செய்யும் ஒரு அலுவலகம் தான் இங்கே இருக்கும்.
அதனால், திரும்ப செல்ல முடியாமல், கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்கிறார்கள்.
சிலரோ, மாணவர்கள் விசா மூலம் கனடாவுக்குள் வந்துவிட்டு, சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
