இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிற்றல் அடையாள அட்டையை வழங்க திட்டமிடப்படுவதாக கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவிப்பு

2 months ago



எதிர்காலத்தில் இலங்கைக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிற்றல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிற்றல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற பிம்ஸ்டெக் டிஜிற்றல் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"அனைவருக்கும் செழிப்புக்கான டிஜிற்றல் பொது உட்கட்டமைப்பை உருவாக்குதல்" என்ற தொனிப்பொருளில் பிம்ஸ்டெக் டிஜிற்றல் மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

இதில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட வெளிநாட்டுத் தூதுவர்கள் குழு கலந்து கொண்டனர்.

டிஜிற்றல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அரச அபிவிருத்தி ஆகிய தலைப்புகள் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.