கனடாவில் பெருந்தொகையான பயணிகள் மற்றும் சரக்குகளுடன் தொடர்புடைய பல நூற்றுக் கணக்கான விமான சேவைகளை முற்றாக முடக்கி விடக் கூடிய வேலைநிறுத்தம் ஏர் கனடா நிறுவனத்தில் நெருங்கி வரும் இறுதித்
ஏர்லைன்ஸ் மற்றும் விமானிகள் சங்கம், ஏர் லைன் பைலட்ஸ் அசோசி யேஷன் (ALPA) ஆகியன இவ்விடயம் தொடர்பாக 15 மாதங்களாகப் பேச்சு நடத்தி வருகின்றன.
ஆனால் நூறுக்கும் மேற்பட்ட சந்திப்புகளுக்குப் பிறகும் தரப்புகள் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்று ஏர் கனடா தெரி வித்துள்ளது.
ஏர் கனடாவில் சுமார் 5,200 விமா னிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏர் லைன் பைலட்ஸ் அசோசியேஷன், 'நியாயமான இழப்பீடு'க்கு கோரிக்கை விடுக்கிறது.
அதே நேரத்தில் ஏர் கனடா தான் 'முன்னோடியில்லாத ஊதிய உயர்வுகளை வழங்கியுள்ளது என்றும், ஆயினும் தொழிற்சங்கங்களின் கோரிக் கைகளை மிக அதிகமானது' என்றும் கூறுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிர வுக்குப் பிறகு 72 மணிநேர வேலை நிறுத்தம் அல்லது லாக் - அவுட் அறி விப்பு வெளிவரலாம்.
இது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தினசரி பயணிகளைப் பாதிக்கும். சரக்கு ஏற்றுமதியை தாமதப்படுத்தும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தற்போதைக்கு, நடந்துகொண்டி ருக்கும் பேச்சுவார்த்தைகளில் மேலும் முன்னேற்றங்கள் எதுவும் இல்லை" என்று ஏர் கனடா நேற்று சனிக்கிழமை அறிக்கையில் தெரிவிப்பு.
தருவாயில் - அதற்கான காலக்கெடு விற்கு சில மணிநேரங்களுக்கு முன்ன ரும் - ஏர் கனடா நிறுவனத்துக்கும் அதன் விமானிகள் தரப்புக்கும் இடையில் முட்டுக்கட்டை நிலைமை நீடித்து இருப்பதாகத் தெரிகிறது. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"அழிந்து போகக் கூடியவை போன்ற சில வகையான சரக்கு ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் சில விமானங்கள் பறக்கும் அட்டவணையை சரிசெய்தல் உட்பட சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கத் தொடங்கியுள்ளோம்.
ஆயினும் இதுவரை எந்த விமானங்களும் ரத்து செய்யப் படவில்லை." என விமான நிறுவனம் கூறியது.
"நாங்கள் எங்கள் திட்டங்களை இறுதி செய்கிறோம். எங்களால் முடிந்தவரை முதல் ரத்துகளை தாமதப்படுத்துகிறோம்" என்று ஏர் கனடா தெரிவித்துள்ளது.