யாழ். அல்லைப்பிட்டியில் வீதியில் பயணித்த தாய், மகளிடம் கையடக்க தொலைபேசி, பணம் கொள்ளை

1 month ago



யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழுத்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது.கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் யாழ்ப்பாண பக்கமாக தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த பகுதியில் முன்னர் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி ஆனதைத் தொடர்ந்து, வீதியோர பொலிஸ் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன.

பொலிஸ் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த பகுதியில் பெண்களிடம் அடிக்கடி வழிப்பறி நடந்து வருகிறது.