யாழ் - கிளிநொச்சி முப்படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவை யாழ். பதில் அரச அதிபர் பிரதீபன் கெளரவித்தார்

4 months ago



யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களின் முப்படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரசிங்கவுக்கு பிரியாவிடை மற்றும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாய கன் கலந்துகொண்டு மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரசிங் கவுக்கு வாழ்த்து பாமாலை வழங்கி வைத்தார். அத்துடன் ஆலய நிர்வாகத்தினர், அரச அதிகாரிகள் தமது கௌரவிப்பை வழங்கினர்.

இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன், யாழ்ப் பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, மற்றும் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், இராணுவ - பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.