தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் இன்று காலை தந்தை செல்வா நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து ஜனாதிபதி தேர்தலில் கறமிறங்கினார்.
8 months ago






தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியளவில் தந்தை செல்வா நினைவுத்தூபியில் அன்னாரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து ஜனாதிபதி தேர்தலில் கறமிறங்கினார்.
இதில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தமிழ் பொது வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரண்டு கூட்டங்களும் மாவட்டங்களுக்கு ஒரு பெரும் பொதுக்கூட்டமும் பொதுவேட்பாளர் கலந்துகொள்ளும் கூட்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
