நேபாளத்தில் புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

5 months ago


நேபாளத்தில் புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி நேற்று ஜனாதிபதி ராம் சந்திர பவுடலால் நியமிக்கப்பட் டார்.

அதன்படி, இன்று காலை புதிய பிரதமரும், அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் புஷ்பகமல் தாஹல் என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

இந்த நிலையில், வரவு - செலவுத் திட்டம் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சியில் அங்கம் வகித்து வந்த முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை திரும்ப பெற்றது.

இதனால், பெரும்பான்மையை இழந்த பிரதமர் பிரசந்தா, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.

இதில் பெரும்பான்மை பெற முடியாது பிரசந்தா அரசு தோல்வியடைந்தது.

இதைத்தொடர்ந்து நேபாளி காங்கிரஸ் கட்சியும், நேபாள கம்யூனிஸ்டு கட்சியும் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தன.

பின்னர், புதிய அரசை அமைக்க ஜனாதிபதியிடம் கே.பி. சர்மா ஒலி உரிமை கோரினார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் ஏற்றுக்கொண் டமையையடுத்து, நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி நேற்று நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்