ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் இன்று யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறும் வாக்குப் பெட்டி விநியோக நடவடிக்கையை கண்காணித்தனர்.

3 months ago


ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, இன்றைய தினம் (20.09.2024) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்குப் பெட்டி விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் நடைவடிக்கைகள் நிறைவு நாளை (21.09.2024) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு மற்றும் இதர ஆவணங்களை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வைத்து சம்பந்தப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (20.09.2024) நண்பகல் 12.30 மணியளவில் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இக் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.