அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ், இரண்டு தீமைகளில் ஒன்றை தெரிவு செய்யவது நிர்ப்பந்தம்”- பாப்பரசர் பிரான்சிஸ் விமர்சனம்.
"அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் வாழ்க்கைக்கு எதிரானவர்கள்”- இவ்வாறு பாப்பரசர் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார். அதேவேளை, “இரண்டு தீமைகளில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்” என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தனது 12 நாட்கள் ஆசிய பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் ரோம் திரும்பிய போது செய்தியாளர்களிடம் பாப்பரசர் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இருவரும் வாழ்க்கைக்கு எதிரானவர்கள். அவர்களில் ஒருவர் புலம்பெ யர்ந்தோர்களை நிராகரிப்பவர், மற்றொருவர் குழந்தைகளைக் கொல்பவர்.
நான் ஓர் அமெரிக்கர் இல்லை. நான் அங்கு வாக்களிக்கப் போவதும் இல்லை. ஆனால், ஒன்று தெளிவாக இருக்கட்டும். இருவரும் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுகிறார்கள். அவர்களுக்கு வேலை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட இருவரையும் ஆதரிப்பது பாவம்.
அமெரிக்கர்கள் இப்போது, இரண்டு தீமைகளில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். யார் மிகவும் குறைவான தீமை உடையவர்? அந்த பெண்மணியா? அல்லது அந்த கனவானா? அது எனக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் தங்களின் மனசாட்சிப்படி சிந்தித்து முடிவெடுக்கட்டும்" என்று பாப்பரசர் கூறினார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட் டியிடும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட் டவிரோதமாக புலம்பெயர்ந் தோரை சுற்றி வளைத்து அவர் களை நாடு கடத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்.
கருக்கலைப்பை பெண்களுக்கான தேசிய உரிமையாக்கிய 1973ஆம் ஆண்டு சட்டத்தை திரும்பவும் மீட்டெடுப்பேன் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குறித்து போப் பிரான்சிஸ் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
(