இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்

1 month ago



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியப் பிரதமரின் இந்தப் பயணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தப் பயணத்தில் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகின்றது.

இந்தப் பயணத்தின் போது ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள கூட்டுத் திட்டங்களைச் செயல் வடிவில் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சம்பூர் மின்நிலையத் திட்டம், திருகோணமலை எரிபொருள் மற்றும் பொருளாதார வலயம், வலுசக்தி குழாய் திட்டம், மற்றும் வடக்குத் தீவுகளின் சூரியசக்தித் திட்டம் உட்பட ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட கூட்டுத் திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வரவின்போது செயல் வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



DOORBIA

அண்மைய பதிவுகள்