


யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து நேற்று(18) சனிக்கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் இவரது உறவினர்கள் இவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இவர் நேற்று அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த குளத்துக்கு அருகிலிருந்து இவரது சைக்கிள் மற்றும் ஆவணங்கள் என்பவை பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
