2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி இலங்கையில் பல்லாயிரம் பேரைக் காவுவாங்கிய சுனாமிப் பேரவலம் நிகழ்ந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு

2 weeks ago



2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி இலங்கையில் பல்லாயிரம் பேரைக் காவுவாங்கிய சுனாமிப் பேரவலம் நிகழ்ந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

டிசம்பர் 26 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி இலங்கையில் பல்லாயிரம் பேரைக் காவுவாங்கிய சுனாமிப் பேரவலம் நிகழ்ந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதைமுன்னிட்டு நாடெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் 14 கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சுனாமிப் பேரவலத்தால் பேரிழப்புகளைச் சந்தித்தனர்.

தேசியத் தரவுகளின் அடிப்படையில் 35 ஆயிரத்து 322 பேர் இந்தப் பேரிடரால் உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக அம்பாறை மாவட்டத் தில் 10 ஆயிரத்து 436 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய தற்காப்புத் தினமும் இன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது.