100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றினர்.
2 months ago
சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளையே விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மொனராகலை - செவனகலை பிரதேசத்தில் இந்தப் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.