குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகி 5 மணிநேரம் வாக்கு மூலம் வழங்கிய பிள்ளையான்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகி 5 மணிநேரம் வாக்கு மூலம் வழங்கிய பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவ நேசத்துரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறினார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4' தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளியொன்றில் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அஸாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும் தொடர்பு இருந்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அங்கு முன்னிலையாகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதையடுத்து அங்கிருந்து அவர் வெளியேறினார்.
எனினும், வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் விரைவில் கைதாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.