யாழ்ப்பாணத்தில் இரு அமைச்சர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை.

4 months ago


ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இரு அமைச்சர்கள் டக்ளஷ் தேவானந்தா இன்றையதினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினரே இன்று காலை யாழ் நகரில் பிரசார நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நல்லூர் சங்கிலியன் தோப்பு மற்றும் உடுப்பட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.