வல்லிபுர ஆலய பிரதம குருக்கள் காலமானார்

6 months ago

வல்லிபுர ஆலய பிரதம குருக்கள் காலமானார்

வரலாற்று பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதமகுரு கணபதிசாமி குருக்கள் சுதர்சனக் குருக்கள் தனது 76ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.

இவர், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பிரதம குருவாக இறை பணியாற்றியுள்ளார்.

துன்னாலை மத்தி, கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஆவரங்கால் சிவன்கோயிலடியை வதிவிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரியை இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. 

அண்மைய பதிவுகள்