மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் 05.01.2025 நடைபெறவுள்ளது
1 week ago
கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வழக்கறிஞருமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு குமார்பொன்னம்பலம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூதுக் கலையக மண்டபத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் கலந்து கொண்டு 'மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்' எனும் தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றுவார் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.