யாழ்.உரும்பிராயில் ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
5 months ago

ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்.உரும்பிராயில் நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தார்.
சிறிது காலம் திருந்தி வாழ்ந்த அவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து ஹெரோயினை உள்ளெடுத்துள்ளார்.
இதையடுத்து வாயிலிருந்து நுரைதள்ளிய நிலையில் அவர் உயிரிழந்தார்.
அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்கு காரணமென பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
