நாட்டில் பயன்பாட்டிலுள்ள 5 ஆயிரம் ரூபாயை காலில் போட்டு மிதித்து அவமதித்த தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனிடம் யாழ்ப்பாண பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.
குறித்த நபர் தனது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கடந்த 7ஆம் திகதி தனது பணிமனையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்கியிருந்தார்.
அந்த சமயத்தில், அவர் 5 ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நிலத்தில் போட்டதுடன், அதனை சப்பாத்து காலால் மிதித்தார்.
இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் பரவின. அவரின், இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். நேற்று முன்தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அவரை அழைத்த பொலிஸார் அவரின் வாக்குமூலத்தை பெற்றனர்.
அவரிடம், பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - என்று பொலிஸார் தெரிவித்தனர்.