இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக இன்று காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்தது.
4 months ago
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது.
அந்தவகையில், இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக இன்றையதினம்(10) 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.