அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என பவ்ரல் சுட்டிக்காட்டு.

4 months ago


அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவ றாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப் பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்,

அமைச்சரவை எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கும், வரிகளைக் குறைப்பதற்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இரத்துச் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அறி விப்பு 14 மில்லியன் அரசாங்க ஊழியர்களை கவருவதற்கான முயற்சி.

சில மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம் ஒரு சதம் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் மூலம் அரசாங்கம் தெரிவித்திருந் தது.சம்பள உயர்வை வழங்கும் அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? உத்தேச சம்பள அதிகரிப்பை வழங்குவது என்றால் அரசாங் கத்துக்கு மாதமொன்றிற்கு 20 மில்லியன் தேவை என்றார். 

அண்மைய பதிவுகள்