31 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலைக்கு பழிக்கு பழி பொலிஸார் மீது வெடி குண்டுத் தாக்குதல்
இந்தியா நாராயண்பூர்: சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில், பாதுகாப்பு படையினர் கடந்த 4ம் தேதி நடத்திய தேடுதல் வேட்டையில் 31 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
கடந்த 3-ம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 பெண்கள் உட்பட 9 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, அபுஜ்மத் வனப்பகுதியில் உள்ள மொகந்தி கிராமம் அருகே பாதுகாப்பு படையினர் வரும் பாதையில் வெடிகுண்டை மறைத்து வைத்தனர்.
இந்த வழியாக பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து சென்ற போது, மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.
இதில் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்தோ திபெத் எல்லை பொலிஸார் சிலர் காயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் நேற்று உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து அபுஜ்மத் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.