ஜப்பானில் அணுகுண்டுலிருந்து உயிர்தப்பியவர்களின் அமைப்பிற்கு 2024 சமாதானத்திற்கான நோபல் பரிசு
2 months ago
ஜப்பானில் அணுகுண்டு வீச்சிலிருந்து உயிர்தப்பியவர்களின் அமைப்பிற்கு 2024 சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நிகோன் ஹிடன்கியோ என்ற அமைப்பிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோர்வேயின் நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
இரண்டு அணுகுண்டு வீச்சுகளை கண்ணால் பார்த்தவர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அணுவாயுதமற்ற உலகை ஏற்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.
அணுவாயுதமற்ற உலகை ஏற்படுத்தும் முயற்சிகளிற்காகவும், அணுவாயுதங்களை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தக்கூடாது என்பதை தாங்கள் நேரில் பார்த்த அனுபவங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் வலியுறுத்தி வருவதற்காகவும் ஜப்பான் அமைப்பிற்கு 2024 சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோர்வே குழு தெரிவித்துள்ளது.