


மாவீரர் தினத்தையொட்டி பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இலண்டனில் விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்று உயிர்நீத்த தமது உறவுகளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தினர்.
புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாம் வாழும் நாடுகளில் மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர்.
இம்முறையும் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தினர்.
இதில் இலண்டனில் நடைபெற்ற நிகழ்வில் திரண்ட தமிழர்கள், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போர் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தியதுடன், தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி நிலைநாட்டப்படுவதன் தேவையையும் வலியுறுத்தினர்.
இங்கையில் தமிழ் மக்களின் இருப்பைத் தீர்மானிக்க சர்வதேச தலையீடு மிகவும் அவசியம் என்றும், சம காலத்தில் ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனித உரிமைகளை நேசிக்கும் மேற்கத்திய நாடுகள் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் வலியுறுத்தினர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
