25 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை கொண்டு வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.


25 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை கொண்டு வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.
25 லட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபருக்கு சொந்தமான பல பயணப் பொதிகள் கடந்த 26 ஆம் திகதி மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
குறித்த பயணப் பொதிகள் Missed package(காணாமல் போன பொதிகள்) களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் விமான நிலையத்தின் அறிவித்தலுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணப் பொதிகளை எடுத்துச் செல்ல குறித்த நபர் சென்றுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து பயணப் பொதிகளை விடுவித்த குறித்த நபர், அவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனையின் போது 245 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 20 வயதுடையவர் என கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
