யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
7 months ago

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதென இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (07) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிதி வழங்கலுக்கமைய குறித்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களுக்கு தயாராகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, வடக்கில் விமான நிலையம், தீவுகளில் காற்றாலை மின்சாரம் மற்றும் தொடருந்து போக்குவரத்து துறைகளில் இந்தியா நிதியுதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
