மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் யாழ். பெரியவிளானில் கைது

2 months ago



மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருந்தது.

இந்நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்கலாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப் பட்டது.

இதன்போது இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந் தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்துடன் தொடர்புடைய மூவர் உள்ளடங்கலாக பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசேட அதிரடிப்படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேக நபரை நேற்றுக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்