ஐந்து இலட்சம் இலங்கையர்கள் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமை

6 months ago

ஐந்து இலட்சம் இலங்கையர்கள் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று ஆபத்தான போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் அறிக் கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

'யுக்திய' நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரிகள் என அடையாளம் காணப்பட்ட 5 ஆயிரத்து 979 பேரில் 5 ஆயிரத்து 449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் பெறுமதி 190 மில்லியன் ரூபா எனவும், சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துகளின் பெறுமதி 11 ஆயி ரத்து 457 மில்லியன் ரூபா எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித் துள்ளார். 

அண்மைய பதிவுகள்