வவுனியா வைத்தியசாலையில் பதவியாவைச் சேர்ந்த கர்ப்பவதியொருவர் அறுவைச் சிகிச்சை மூலம் 4 குழந்தைகளைப் பிரசவித்தார்

1 month ago



வவுனியா வைத்தியசாலையில் பதவியாவைச் சேர்ந்த கர்ப்பவதியொருவர் நேற்று முன்தினம் இரவு பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவித்தன.

மேற்படி தாயார் மகப்பேற்று வைத்திய நிபுணர் காமினியால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் அவரது மகப்பேற்று வைத்திய விடுதியாகிய 7ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டு வைத்தியர் திலீபனால் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவித்தன.

குறிப்பாக வவுனியா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

மேற்படி தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 

அண்மைய பதிவுகள்