இலங்கை வாகனங்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

4 months ago


இலங்கை வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பயன்படுத்திய வாகனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.  

அத்துடன், தொடர்ந்தும் வாகனங்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று(18) சந்தையில் கிடைக்கும் வாகன விலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதன்படி, டொயோட்டா பிரீமியர் - 2017 இன்று முந்தைய விலை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சம் ரூபாய், புதிய விலை ஒரு கோடியே எழுபது லட்சமாக உயர்ந்துள்ளது. 

மேலும், Toyota - Vitz - 2018 இன் முந்தைய விலை 80 லட்சம், புதிய விலை 88 லட்சம் ரூபாவாகும்.

இதேவேளை, Toyota - Aqua G - 2012இன் முந்தைய விலை 60 லட்சம், புதிய விலை 68 லட்சம் ரூபாவாகும்.

அத்துடன், Honda – Vessel 2014இன் முந்தைய விலை 80 இலட்சம், புதிய விலை 98 இலட்சம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 

அண்மைய பதிவுகள்