உமாமகேஸ்வரனின் சிலை வவுனியாவில் திறந்து வைப்பு.

5 months ago


தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக் கப்பட்டது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அண்மையாக அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் சிலையை புளொட்டின் தற்போதைய தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய அரசி யல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழீழ விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

உமா மகேஸ்வரனின் இயற்பெயர் க. நல்லைநாதன் என்பதாகும். 1945 பெப்ரவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் வறுத்தலை விளானில் பிறந்தார். நில அளவையாளர் திணைக்களத்தில் உயர் அதிகாரியாக இவர் கொழும்பில் பணியாற்றினார்.

அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு கிளை செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.

பின்னாளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டதுடன், பலஸ் தீனத்தில் ஆயுதப் பயிற்சியும் பெற்றார்.

1980ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பை நிறுவியிருந்தார். விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு இறந்தார்.





அண்மைய பதிவுகள்