டானா” புயலால் வடமாகாணத்துக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.--யாழ். பல்கலைக்கழக நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
டானா” புயலால் வடமாகாணத்துக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று யாழ். பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக எல்லா இடங்களுக்கும் மழை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
டானா புயலால் இலங்கையின் வடக்கு - கிழக்குக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் அவரிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும், “இன்று தீவிர தாழமுக்கமாக இருந்து நாளை புயலாக மாறிவிடும்.
அது இந்தியாவின் ஒடிசா - அஸாம் மாநிலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும்.
இதனால் எங்களுக்கு நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆனால், இன்றிலிருந்து கடல் கொந்தளிப்பாக இருக்கும். சில சமயங்களில் அலைகளின் உயரங்கள் அதிகரிக்கும்.
காற்றும் அதிகமாக இருக்கும் என்பதால் கடலுக்கு மீனவர்கள் செல்வது அவ்வளவு நல்ல தல்ல”- என்றார்.
இதேவேளை, வங்காள விரிகுடாவில் ஏற்படவுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கில் கனமழைக்குச் சாத்தியம் உள்ளது என்றும் கூறினார்.