

வவுனியாவில் பாரம்பரிய முறைப்படி மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திரவினால் நெல் அறுவடை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா 2025 நாளையதினம் (16.01) நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு குறித்த பொங்கலிற்கான அரிசிக்கான, நெல்லினை பெற்றுக் கொள்வதற்கான சம்பிரதாய நிகழ்வானது வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது நெல் வயலில் இறங்கி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திரவினால் பாரம்பரிய முறைப்படி நெல் அறுவடை செய்யப்பட்டு வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மற்றும் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கோவில்குளம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை நாளையதினம் கந்தசாமி ஆலயத்தில் இருந்து குறித்த நெல் கதிர்கள் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
