கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தால் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024 டிசெம்பர் வரையான காலப் பகுதியில் 78 ஆயிரத்து 375 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின், தச்சடம்பன், அம்பகாமம், ஒலுமடு, மாங்குளம், கொக்காவில் பகுதிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை, கிளாலி, இயக்கச்சி மற்றும் ஆனையிறவு, தட்டுவன் கொட்டி ஆகிய பகுதிகளிலும் வெடிபொருட்கள் அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
தொடர்ந்து ஸார்ப் நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு, அம்பகாமம், மாங்குளம், கொக்காவில், தட்டுவன் கொட்டி மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.