யாழ்.போதனா மருத்துவமனையின் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் த.கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக பதவியேற்பு
1 month ago
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 2025ஆம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றுள்ளார்.
கோபிசங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார்.
தேசிய மருத்துவ சங்கம் ஒன்றுக்கு யாழ்.போதானா மருத்துவமனையில் இருந்து தெரிவான முதல் மருத்துவ நிபுணர் இவரேயாவார்.
இவர், அண்மையில் நிறுவப்பட்ட சர்வதேச சத்திர சிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான தலைவராகவும் கோபிசங்கர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.