இலங்கை அறுகம்குடா விசாரணை குறித்த அறிக்கையை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு

2 months ago




இலங்கை அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளிற்காக தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்க தீர்மானித்துள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

அறுகம்குடா தாக்குதல் திட்டம் குறித்த மிகவும் இரகசியமான விசாரணை அறிக்கையையும் டிஐடியினர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரை விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மேலதிக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்