யாழ்.நகரப் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடாவடித் தனத்தில் ஈடுபட்ட வன்முறைக் குழு கைது

6 days ago



யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடாவடித் தனத்தில் ஈடுபட்ட வன்முறைக் குழு கைதுசெய்யப்பட்டுள்ளது.

அந்தக் குழுவிடம் இருந்து இரண்டு ஓட்டோக்களும் மீட்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு தினத்தன்று அதிகாலை வேளையில் அந்தக் குழு இளைஞர் இருவரை கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்துத் தரிப்பிடத்திலும் அந்தக் குழு அட்டகாசம் புரிந்துள்ளது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே, அரியாலை மற்றும் பொம்மைவெளிப் பகுதி யைச் சேர்ந்த நான்கு பேர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இது தொடர்பில் விரைந்து செயற்படுமாறு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.