வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள 03 ஏற்றுமதி வலயங்களில் 02 வலயங்கள் இன்று உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன.
7 months ago




வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் இன்று (13/09/2024) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று பெயரிடப்பட்டன.
இந் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம,சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் கலந்து கொண்டு உத்தியோகபூர்வ அங்குராப்பணம் செய்து வைத்தனர்
இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் முதலீட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
