யாழ்.வடமராட்சியில் பொலிஸ் உத்தியோகத்தரை வாகனத்தால் இடித்து வீழ்த்திய மண் கடத்தல்காரர்கள்

2 months ago



சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனத்தால் பொலிஸ் உத்தியோகத்தரை இடித்து வீழ்த்தி விட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்ற நிலையிலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பொலிஸாரால் மீக்கப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் வடமராட்சி - வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

துன்னாலை - வல்லிபுரம் வீதி ஊடாக மணல் கடத்தி வந்த மகேந்திரா ரக வாகனத்தை பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் பொலிஸார் மறித்துள்ளனர்

இதன்போது மண் கடத்தி வந்த வாகனம் வேகத்தைக் குறைத்த போது பொலிஸார் ஒருவர் அதை மடக்கிப் பிடிக்க முற்றபட்ட போது மணல் கடத்தி வந்த வாகனம் தாறுமாறாக ஓடியது.

பொலிஸ் உத்தியோகத்தர் இடித்து வீழ்த்தப்பட்ட நிலையில் அவர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்போது தப்பிச் சென்ற வாகனத்தைப் பருத்தித்துறை பொலிசார் மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.