அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவாதத்திற்கு பின்னடித்த டிரம்ப் வேறொரு நிகழ்வுக்கு அழைப்பு விட்டமைக்கு கமலா ஹாரிஸ் தரப்பு கடும் விமர்சனம்

5 months ago


அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நேரடி விவாதத்திலிருந்து பின்னடித்துள்ள டிரம்ப். வேறொரு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ள மைக்கு கமலா ஹாரிஸ் தரப்பு கடும் விமர்சனம் செய்துள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அதிபர் தேர்தல் நடை பெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹரிஸ் ஆகியோர் போட்டியிடுவது ' உறுதியாகிவிட்டது.

தேர்தல் பிரசாரத்தின்போது, வேட் பாளர்கள் நேரடி விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். இந்த விவாதத் தின்போது நாட்டின் முக்கிய பிரச் சினைகள் குறித்தும், ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் வேட்பாளர்கள் தங்கள் கருத்தை முன்வைப்பார்கள். இதன்மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற முடியும். அதன்படி, 'ஏ.பி.சி. நியூஸ்' ஏற்பாட் டில் எதிர்வரும் செப்ரெம்பர் 10ஆம் திகதி கமலா ஹரிஸ், டிரம்ப் பங் கேற்கும் நேரடி விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.ஆனால் இந்த நேரடி விவாதத்தை டிரம்ப் தவிர்த்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்,

"செப்ரெம்பர் 10ஆம் திகதி 'ஏ.பி. சி.'செய்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் விவாதத்தில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. அதற்கு முன்னதாக செப்ரெம்பர் 4ஆம் திகதி பொக்ஸ் நியூஸ்' சார்பில் நடைபெற உள்ள விவாதத்தில் கலந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

"பொக்ஸ் நியூஸ் விவாதத்தில் கலந்து கொள்ள, கமலா ஹரிஸ் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவருடன் இனி நேரடி விவாதம் நடத்தப்போவதில்லை” என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எனினும், டிரம்பின் இந்த மாற்று யோசனையை கமலா ஹரிஸ் நிரா கரித்துள்ளார்.

விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் பயப் படுகிறார். அதனால் விவாதத்தைத் தவிர்க்க முயற்சிக்கிறார்” என்று கமலா ஹரிஸின் பிரசாரக் குழு கூறியிருக்கிறது.

செப்ரெம்பர் 10ஆம் திகதி நடத்த உள்ள விவாத நிகழ்ச்சியானது, இதற்கு முன்பு போட்டியில் இருந்த பைடனும், டிரம்பும் ஒப்புக்கொள்ளப்பட்டபடி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிதான். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விவாதம் செய்யத் தயாராக இருக்கின்றனர் என இருவரும் கூறியிருந்தனர். தற்போது செப்ரெம்பர் 10ஆம் திகதி விவாதத்தை டிரம்ப் தவிர்த்திருப்பதை கமலா ஹரிஸ் விமர்சனம் செய்துள்ளார்.

"எந்த நேரத்திலும், எந்த இடத்திலும்" என்ற நிலைப்பாடு எப்படி "ஒரு குறிப் பிட்ட நேரம், ஒரு குறிப்பிட்ட பாது காப்பான இடம்" ஆக மாறியது என்பது சுவாரஸ்யமானது. டிரம்ப் ஒப்புக் கொண்டது போல் நான் செப்ரெம்பர் 10ஆம் திகதி அங்கு இருப்பேன், நான் அவரை அங்கே சந்திப்பேன் என நம்புகிறேன்" என்று கமலா ஹரிஸ் தெரிவித்தார்.