மதுபானசாலை அனுமதியை வழங்க கலால் திணைக்கள அதிகாரிகள் சிலர் 20 மில்லியனை கோரியுள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவிப்பு
மதுபானசாலை அனுமதிகளை வழங்குவதற்காக ஊழல்மிக்க கலால் திணைக்கள அதிகாரிகள் சிலர் அண்மையில் 20 மில்லியன் ரூபாய் வரை கோரியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறாக அனுமதி வழங்கப்பட்ட சில மதுபானச்சாலைகளின் தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் குறித்த ஊழல் மோசடிகள் தொடர்பான குரல் பதிவுகள் தங்களிடம் உள்ளதாகவும் வசந்த சமரசிங்க கூறினார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சமரசிங்க, இலஞ்சம் கொடுக்க மறுத்தவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கே குறித்த அதிகாரிகள் மறுத் துள்ளனர்.
"இந்த ஊழல் பேரங்கள் காரணமாக அரசுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கலால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்று சமரசிங்க கூறினார்.
இதேவேளை, மதுபான போத்தலில் போலி பாதுகாப்பு ஸ்ரிக்கர் ஒட்டி மோசடியில் ஈடுபட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட வார இறுதியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.