சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு.
7 months ago

சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் சமூக ஊட கங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமைய, குறிப்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தனியான சேவை ஆரம் பித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொலிஸ் இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அவதானம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
