கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தின் லொயிட்மினிஸ்டர் பகுதியில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகா ணத்தின் லொயிட்மினிஸ்டர் பகுதி யில் மூன்று பேர் படுகொலை செய் யப்பட்டுள்ளனர்.
லொயிட்மின்ஸ்டர் பகுதியில் இந்தப் படுகொலைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த கொலைகளுடன் தொடர்பு டைய நபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆயினும் இந்த சம்பவத்தினால் பொது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என அறி விக்கப்பட்டுள்ளது.
இது திட்டமிட்டு இலக்கு வைக்கப் பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவம் என பொலி ஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த முக்கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
குறித்த பகுதியில் நபர் ஒருவரும் அவரது இரண்டு மகன்களும் வாழ்ந்து வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இரண்டு நாள்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.