வடமராட்சியில் பாம்பு தீண்டி தாய் மரணம்

6 months ago

வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடுக்குளாய் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான திருநாவுக்கரசு புனிதசோதி என்பவரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமன்று காலை வீட்டின் நிலப்பகுதியை துப்பரவு செய்து கொண்டிருந்தவேளை பனை ஓலைக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த தாய் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.