வவுனியா - பறயனாலங்குளம் - ஆண்டியா புளியங்குளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

1 month ago



வவுனியா - பறயனாலங்குளம் - ஆண்டியாபுளியங்குளம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறய னாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்