யாழ்.வாகனச் சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து 05 பவுண் நகை கொள்ளை

2 months ago



வாகனச் சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரின் நகைகளே நேற்று முன்தினம் கொள்ளையடிக்கப்பட்டன.

வாகன வாடகை தரிப்பிடத்துக்குச் சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவரவேண்டுமெனக் கூறி, வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி அவ்வாகனத்தில் இருவரும் கிளிநொச்சி நோக்கிப் பயணித்துள்ளனர்.

பரந்தன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வீதியோரமாக வாகனத்தை நிறுத்துமாறு இருவரும் சாரதியிடம் கூறியுள்ளனர்.

வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர் அப்பகுதியில் உள்ள கடையொன்றில் இருவரும் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர்.

குளிர்பானத்தை குடித்த சாரதி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

வீதியோரத்தில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப் பட்ட வாகனத்தில் சாரதி அசைவின்றி மயக்க நிலையில் இருந்ததை அவதானித்த சிலர், சாரதியை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட சாரதி சுயநினைவுக்கு வந்த பின்னரே, தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.


அண்மைய பதிவுகள்