இந்தியாவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் வருவதைக் கண்டு துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்தார்.

4 months ago


இந்தியாவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் வருவதைக் கண்டு துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்தார்.

இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சரக்கு ரயில் வருவதைக் கண்ட பெண் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் விகர்பாத் தின் நவாந்த்கியில் ஒரு பெண் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, திடீரென ரயில் ஒன்று வருவ தைக் கவனித்தார். உடனே அந்தப் பெண் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார்.

ரயில் தனக்கு மேலே சென்று கொண்டிருப்பதை உணர்ந்து பதற்றம் அடைந்தாலும், அந்தப் பெண் அசையாமல் படுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவள் தலையை தூக்க முயன்றாலும், அந்தச் சம்பவத்தை படமெடுக்கும் ஒருவர் அவளை தலையை கீழே வைக்கும்படி அறிவுறுத்தினார்.

பதற்றமான சில நொடிகளுக்குப் பிறகு, ரயில் கடந்து செல்கிறது. அவள் பாதுகாப்பாக தண்டவாளத்திலிருந்து எழுந்தாள். அவளது தோழியான மற்றொரு பெண், தண்டவாளத்தின் அருகே காத்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

இந்தச் சம்பவம் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண்ணின் சிந்தனைத்திறன் மற்றும் அதிர்ஷ்டம் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

அண்மைய பதிவுகள்